Breaking News
மோடியை சீன அதிபர் சந்திக்க மாட்டார்’மோடியை சீன அதிபர் சந்திக்க மாட்டார்’

இந்தியாவுடன் சுமுகமான சூழல் இல்லாததால், பிரதமர் நரேந்திர மோடியை, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேச வாய்ப்பில்லை’ என, சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சிக்கிம் மாநிலம் – சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் — பூட்டான் இடையே உள்ள டோகாலாம் பகுதியில், சீன ராணுவம் சாலை அமைத்ததுடன், நம் ராணுவத்தின் பதுங்கு குழிகளையும் அழித்தது. இதையடுத்து, நம் வீரர்கள், சீனாவின் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். ‘அந்த பகுதியில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறாவிடில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என, சீனா எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில், வளர்ந்த நாடுகளின் அமைப்பான, ‘ஜி 20’ மாநாடு இன்று துவங்குகிறது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட, உலக நாடுகளின் தலைவர்கள்
பங்கேற்கின்றனர். அப்போது, நரேந்திர மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திப்பு நடக்கும் என,
தகவல் வெளியானது. ஆனால், இதை சீனா மறுத்துள்ளது.

இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: டோகாலாம் விவகாரத்தில், இந்தியா – சீனா இடையிலான உறவு, தற்போது சுமுகமாக இல்லை. எனவே, ‘ஜி 20’ மாநாட்டில் பங்கேற்கும் இரு நாட்டு தலைவர்களும், தனியாக சந்தித்து பேச வாய்ப்பில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளது. எனினும், இதை, இந்தியா தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், ‘ஜி 20’ மாநாட்டில் பங்கேற்கும், இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் அடங்கிய, ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தலைவர்கள் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இந்தியாவுடன் சுமுகமான சூழல் இல்லாததால், பிரதமர் நரேந்திர மோடியை, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேச வாய்ப்பில்லை’ என, சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சிக்கிம் மாநிலம் – சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் — பூட்டான் இடையே உள்ள டோகாலாம் பகுதியில், சீன ராணுவம் சாலை அமைத்ததுடன், நம் ராணுவத்தின் பதுங்கு குழிகளையும் அழித்தது. இதையடுத்து, நம் வீரர்கள், சீனாவின் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். ‘அந்த பகுதியில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறாவிடில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என, சீனா எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில், வளர்ந்த நாடுகளின் அமைப்பான, ‘ஜி 20’ மாநாடு இன்று துவங்குகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட, உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அப்போது, நரேந்திர மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திப்பு நடக்கும் என, தகவல் வெளியானது. ஆனால், இதை சீனா மறுத்துள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: டோகாலாம் விவகாரத்தில், இந்தியா – சீனா இடையிலான உறவு, தற்போது சுமுகமாக இல்லை. எனவே, ‘ஜி 20’ மாநாட்டில் பங்கேற்கும் இரு நாட்டு தலைவர்களும், தனியாக சந்தித்து பேச வாய்ப்பில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளது. எனினும், இதை, இந்தியா தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், ‘ஜி 20’ மாநாட்டில் பங்கேற்கும், இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் அடங்கிய, ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தலைவர்கள் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.