Breaking News
தமிழக சிறைகளில் அதிரடி சோதனை: தண்டனை கைதி அறைகளில் வண்ண ஆடைகள் பறிமுதல்

தமிழக சிறைகளில் உள்ள கைதி களுக்கு சிறப்பு சலுகைகள் ஏதும் வழங்கப்படுகிறதா என்பதை அறிய திருச்சி மத்திய சிறை உட்பட அனைத்து சிறைகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட் டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிமுக பொதுச்செய லாளர் (அம்மா அணி) சசிகலா உள்ளிட்ட சிலருக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக அம்மாநில சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார். மேலும் சசிகலா, இளவரசி ஆகியோர் கைதிகளுக்கான சீருடை அணி யாமல் சாதாரண உடை அணிந் திருப்பது போலவும், அவர் களுக்கான அறையில் சிறை நிர் வாகத்தால் வழங்கப்படாத வேறு சில பொருட்கள் இருப்பது போல வும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. இந்த விவகாரம் கர்நாடகா, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக சிறை களில் எந்தவொரு கைதிக்கும் சிறப்பு சலுகைகள் அளிக்கக்கூடாது எனவும், இதுதொடர்பாக ஆய்வு நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கு மாறும் சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு, சிறைத் துறை யினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

டிஐஜி ஆய்வு

இதன்படி, திருச்சி சரக சிறைத் துறை டிஐஜி ஜெயபாரதி நேற்று முன்தினம் இரவு திடீரென சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் மற்றும் அதிகாரி களுடன் திருச்சி மத்திய சிறைக்குச் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார். அப்போது, சிறையிலுள்ள அனைத்து பிளாக்குகளுக்கும் சென்று ஆய்வு நடத்தப்பட்டது.

குறிப்பாக உயர் பாதுகாப்பு தொகுதியில் சிலை கடத்தல் வழக்கில் கைதான சுபாஷ்சந்திர கபூர், எண்ணூர் தனசேகரன், ஹனீபா உள்ளிட்டோர் தங்கியுள்ள அறைகளையும், லாட்டரி வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருச்சி தொழிலதிபர் எஸ்.வி.ஆர்.மனோகரன் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியையும் சிறைத்துறை டிஐஜி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, தண்டனை கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள அனைத்து அறைகளிலும் சிறைக் காவலர்கள் நேற்று அதிகாலை சோதனை நடத்தினர். அப்போது, தண்டனைக் கைதிகளுக்கான வெள்ளைச் சீருடையைத் தவிர்த்து, அந்த அறைகளில் வைக்கப் பட்டிருந்த கைலிகள், பேன்ட், டீ சர்ட் உள்ளிட்ட ஆடைகள் கைப்பற்றப்பட்டு, சிறையிலுள்ள துணிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுதொடர்பாக சிறைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “எந்த கைதிக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கக்கூடாது என்பதில் சிறைத் துறை நிர்வாகம் உறுதியாக உள்ளது. அதற்காக திருச்சி மட்டுமின்றி புழல்-1, புழல்-2, வேலூர், கடலூர், கோவை, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலுள்ள மத்திய சிறைகள், புழல், வேலூர், திருச்சி, கோவை, மதுரையிலுள்ள பெண் கள் தனி சிறைகளில் இது போன்று சோதனை நடத்தப்படு கிறது.

தண்டனை கைதிகள் நீதி மன்றத்துக்கு செல்லும்போது வண்ண ஆடைகளை அணிந்து கொள்வர். திரும்பி வந்தவுடன் சிலர் அந்த ஆடைகளை திருப்பி ஒப்படைக்காமல், அறைகளில் வைத்துக் கொள்கின்றனர். அது போன்ற ஆடைகள்தான் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.