Breaking News
ஆன்லைனில் போதை மருந்து: கருகும் பிஞ்சுகள்

ஹைதராபாத்தின் புகழ்பெற்ற பள்ளிகளில் படிக்கும் பதின்பருவ மாணவர்கள் ஆன்லைனில் போதை மருந்துகள் ஆர்டர் செய்து வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது.

ஹைதராபாத் நகர மதுவிலக்கு மற்றும் கலால் பிரிவு புலனாய்வுத் துறையினர் கடந்த ஜூலை 2ம் தேதியிலிருந்து தொடர்ந்து இதுகுறித்து விசாரணை செய்து, இவர்கள் வரவழைத்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.

குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட ஒருவரை விசாரிக்கும்போது, இவர்கள் பெயர்களை அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இம்மாணவர்கள் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவித்ததாவது:

ஆரம்பாத்தில், குற்றம்சாட்டப்பட்டவர் கூறிய தகவல்களை எங்கள் விசாரணை அதிகாரிகள் நம்பவில்லை. நன்கு தெரிந்த வட்டாரங்களில் போதைப்பொருட்கள் ஆன்லைன் வழியாக புழங்கிவருவது குறித்த விசாரணையை மேலும் நாங்கள் முடுக்கியபோது இந்த நான்கு டீன்ஏஜ் மாணவர்களும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் நால்வரும் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒரு சிறுவனின் தந்தை ஒரு கன்ஃபர்டு ஐஏஎஸ் அதிகாரியாவார். அவர் அரசாங்கத்தின் முக்கியப் பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார்.இன்னொரு சிறுவனின் பெற்றோர் மருத்துவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அரசாங்கத்தில் பொறுப்பான நிலையில் இருக்கிறார். மற்ற இரண்டு மைனர் மாணவர்களின் பெற்றோர், பல்வேறு நிறுவனங்களை விமான நிலைய கட்டுமானப் பணிகளோடு இணைக்கும் ஒரு புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ளவர்கள்.

விசாரணைக்காக அவர்களை அணுகி வந்தபோது, மாணவர்கள் பீதியில் இருப்பதாகவும் அவர்கள் தங்களைப் பற்றிய தகவல்கள் வெளியே வருவதைக்கண்டு பீதியடைவார்கள். அதனால் அவர்கள் பேசமாட்டார்கள். விசாரணைக்கான எந்த ஒரு தகவலுக்காகவும் அவர்களை அனுப்ப முடியாது என்று கூறி மறுத்துவிட்டார்கள். இறுதியில் அவர்களில் ஒரு மாணவரின் அண்ணனின் நண்பர் ஒருவர் மூலம் அவர்கள் ஆன்லைனில் போதை மருந்து தருவித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெங்களூருவில் ஒரு பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு பயிலும் அந்த நபர்தான் அவர்களுக்கு இணையதளம் வழியாக போதை மருந்து ஆர்டர் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளார். அந்த நபர் தனது பெயரை வெளியே சொல்ல விரும்பவில்லை. மைனர் பருவத்தில் உள்ள அந்த மாணவர்கள் இவரிடம்தான் போதை மருந்தை ஆர்டர் செய்வதற்கான அதற்கென்று உள்ள சாஃப்ட்வேரை தரவிறக்கம் செய்ய கற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் மடிக்கணினிகளில் அதை தரவிறக்கம் செய்துகொண்டனர்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் விசாரணை அதிகாரிகள் மாணவர்களின் கையில் உள்ள லேப்டாப்பை வாங்கிப் பார்த்து உண்மையைக் கண்டுபிடிக்க முயன்றுள்ளனர். அம்மாணவர்களின் ஒருவரது லேப்டாப்பில் குறிப்பிட்ட இணையதளத்திற்கு இணைப்பு கொடுத்து பார்த்துள்ளனர். அப்போது 36 விநாடிகளிலேயே எல்எஸ்டி ( Lysergic Acid Diethylamide) எனப்படும் அந்த போதை மருந்து ஆர்டர் செய்யமுடிந்துள்ளது. இதில் இன்னும் ஒரு சுவாரஸ்யம் கொரியர்மூலம் போதை மருந்தைப் பெற அம்மாணவர்கள் தங்கள் வீட்டு முகவரியைக் கொடுத்துள்ளதுதான்.

இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் போதைத் தடுப்பு இயக்குநர் அகுன் சபர்வால் கூறியபோது, ‘பெற்றோர்கள் பார்சர் சர்வீஸ் அல்லது கூரியர் ஏஜென்சீஸ் வழியாக தங்கள் பிள்ளைகளுக்கு ஏதோ பாட புத்தகம்தான் வருகிறது என்று நினைத்துவிட்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். இந்த போதை மருந்துகள் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த நான்கு மாணவர்கள்மீது எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்பட மாட்டாது,” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.