Latest News
குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கோரிய வழக்கு : சி.பி.சி.ஐ.டி. 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவுகூட்டணி என்பதால் குட்டகுட்ட குனிய மாட்டோம் -பிரேமலதா விஜயகாந்த்குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு 99 பேருக்கு வாழ்நாள் தடை 3 இடைத்தரகர்கள் கைது; 2 தாசில்தார்களிடம் விசாரணைசென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா நாளை கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடி ஏற்றுகிறார்டெல்லியில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அழிப்புகுற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தல் ‘டிக்கெட்’ கொடுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் யோசனை

டார்ஜிலிங்கில் போராட்டம் தொடர மம்தாவே காரணம்: மத்திய அமைச்சர் அனந்தகுமார் குற்றச்சாட்டு

0

டார்ஜிலிங்கில் சகஜநிலை திரும் பாததற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அணுமுறை களே காரணம் என மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

கூர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) உள்ளிட்ட அமைப்பு கள் ஒன்றுகூடி கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக அங்கு போராட் டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சுற்றுலாத்தலமான டார்ஜிலிங் கில் கடைகள் அடைக்கப்பட்டுள் ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் எம்பி முகமது சலீம் பூஜ்ய நேரத்தில் பேசியதாவது:

பள்ளிகளில் வங்க மொழியைக் கட்டாயமாக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்ததுடன், மலைப் பகுதி (டார்ஜிலிங்) நிர்வாகங்களிலும் தலையிடுகிறார். இதனால் அங்கு போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மக்கள் மீது போர் தொடுக்க வேண்டாம்.

மேற்கு வங்க மாநில உணவுத் துறை அமைச்சர் மலைப் பகுதி களுக்கு அத்தியாவசியப் பொருட் கள் எடுத்துச் செல்வது தடுக்கப் படும் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இந்த விஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. அரசியலமைப்புச் சட்டப்படி ஆட்சி நடத்த மம்தாவுக்கு அறிவுறுத்த வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்குப் பதிலளித்த நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார், ‘டார்ஜிலிங்கில் தற்போதைய நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. அங்கு சகஜநிலை திரும்ப வேண்டும். அமைதியான மலைப்பகுதியில் தீ பற்றி எரிகிறது என்றால் அதற்குக் காரணம் முதல்வர் மம்தாவின் அணுகுமுறைதான். மீண்டும் அங்கு அமைதி நிலவினால் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் மற்றும் கூர்க்கா பிராந்திய நிர்வாகம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடியும்’ என்றார். இந்த விவாதத்தின் போது மக்களவையில் திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் எவரும் இல்லை.

மம்தா அழைப்பு

கொல்கத்தாவில் முதல்வர் மம்தா கூறுகையில், ‘வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ‘இந்தியாவில் இருந்து பாஜகவை வெளியேற்றும்’ இயக்கத்தை திரிணமுல் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. இது எங்களது சவால் ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக ஓரணியில் திரண்ட 18 எதிர்க்கட்சிகளும் அடுத்த மக்களவைத் தேர்தலிலும் பாஜகவை ஒன்றிணைந்து எதிர்க்கும்’ என்றார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.