Breaking News
ஐசிசி தரவரிசை: பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் ஜடேஜா முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வீரர் ரவீந்தர ஜடேஜா 897 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். 849 புள்ளிகளுடன் அஷ்வின் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களுக்குள் வேறு எந்த ஒரு இந்திய வீரர்களும் இடம் பெறவில்லை.

இதேபோல், டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் 941 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 885 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 4-வது இடத்தில் 866 புள்ளிகளுடன் புஜாராவும் ஐந்தாவது இடத்தில் 826 புள்ளிகளுடன் விராட் கோலியும் உள்ளனர்.

ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். டேவிட் வார்னர் இரண்டாம் இடத்திலும் , டி வில்லியர்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை பந்து வீச்சாளர்கள் பட்டியலில் எந்த ஒரு இந்திய வீரரும் இடம் பெறவில்லை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.