Breaking News
சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நிலை அறிக்கையை தாக்கல் செய்வதில் காட்டும் தாமதத்தையே செல்லி உயர் நீதிமன்றம் கேள்விக்குட்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமி 45 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடும்படி கோரி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஏற்கனவே அவர் நீதிமன்றத்தின் பார்வையின்கீழ் சிறப்பு விசாரணைக் குழுவை சிபிஐ அமைத்து இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
சுனந்தாவின் மகன் ஷிவ் மேனன் சுவாமியின் வழக்கு பொது நல வழக்கல்ல; அது விளம்பர நல வழக்கு என்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மூன்றாண்டுகளாக வழக்கில் குற்றப்பத்திரிகையை காவல் துறையினர் தாக்கல் செய்யவில்லை என்பதில் கவலைத் தெரிவித்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆதாரங்களை சேகரித்த காவல் துறையினர் சசி தரூர் மற்றும் சுனந்தாவின் நெருங்கிய நண்பர்கள் அளித்த மின்னணு சாட்சியங்களின் இறுதி முடிவை பெறவில்லை என்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டில் இறந்த ஒருவர் வழக்கில் முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியது காவல்துறை. பின்னர் அது குற்றவியல் வழக்காக மாறியது.
அதன் பின்னர் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதையடுத்து டெல்லி காவல்துறை சுனந்தா வழக்கில் இன்னும் விசாரணை நடந்து வருவதாகவும் புதிய  தகவல்கள் கிடைக்கும்பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றுள்ளது. விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றம் கேட்கும் விவரங்கள் நிலை அறிக்கையில் இடம் பெறும் என்று கூறினார் அதன் செய்தித் தொடர்பாளர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.