வெளிநாடு செல்ல கார்த்திக்கு அனுமதி? சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

0

‘வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்ற, காங்கிரஸ் மூத்த தலைவர், சிதம்பரத்தின் மகன், கார்த்தி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம், இன்று(அக்.,11) விசாரிக்க உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, சி.பி.ஐ., மோசடி வழக்கை தொடர்ந்துள்ளது.இந்த வழக்கில் தேடப்படும் நபராக, அவர் அறிவிக்கப்பட்டார். அதனால், வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ‘ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில் மகளை சேர்ப்பதற்காக, செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்’ என, கார்த்தி சார்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, கார்த்திக்கு அனுமதி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக, எழுத்துப் பூர்வமாக பதிலை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்ற அமர்வு, கார்த்தியின் மனு மீது, இன்று முடிவெடுப்பதாக கூறியுள்ளது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.