நிர்மலாவுக்கு சீனாவில் வரவேற்பு

0
சிக்கிம் எல்லையில், சீன ராணுவத்தினருடன், ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் கலந்துரையாடியதை, அந்நாட்டு பத்திரிகைகள் வரவேற்றுள்ளன.ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாராமன், சமீபத்தில், சிக்கிம் மாநிலத்தில், இந்திய – சீனா எல்லையில் உள்ள, நாதுலா கணவாய்க்கு சென்றார். அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள, இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினருடன் பேசினார். சீன எல்லையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, சீன ராணுவத்தினருடனும் நிர்மலா பேசினார். ‘நமஸ்தே’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையும், அவர்களுக்கு விளக்கினார்.

இந்நிலையில், சீன ராணுவத்தினருடன், நிர்மலா சீதாராமன் பேசியதை, அந்நாட்டு பத்திரிகைகள் வரவேற்றுள்ளன. ‘இந்திய ராணுவ அமைச்சரின் செயல்பாடு, இந்திய – சீன எல்லையில் பதற்றத்தை குறைத்து, அமைதியை ஏற்படுத்த வழிவகுக்கும். நிர்மலா சீதாராமனின் இந்த செயல்பாட்டை, இந்தியர்களும் வரவேற்பர்’ என, எழுதியுள்ளன.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.