Latest News
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 18 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்ததுநிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தமிழகத்தில் மின்தடையை போக்க கைகொடுக்கும் காற்றாலைகள்எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார் எம்.எல்.ஏ. கருணாஸ்ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடிரபேல் விமான பேரம் : ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டாளியாக தேர்வு - மத்திய அரசு விளக்கம்பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் - ராணுவ தளபதிநாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல : சுப்ரீம் கோர்ட்டு கருத்துசென்னையில் இன்று பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்வு, டீசல் விலையில் மாற்றமில்லைதமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் திமுகவினர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டு

2-வது டி 20 ஆட்டத்தில் பதிலடி கொடுத்தது ஆஸ்திரேலியா

0

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குவாஹாட்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு மார்க்கஸ் ஸ்டாயினிஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. பெஹ்ரென்டார்ப் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரிகள் விரட்டிய ரோஹித் சர்மா (8) 4-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 2 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் இதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். மிடில் ஸ்டெம்பை நோக்கி வீசப்பட்ட பந்தை கோலி பிளிக் செய்ய முயன்ற போது, அது பெஹ்ரென்டார்பிடமே கேட்ச்சாக மாறியது. சர்வதேச டி 20 போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இதுவே முதன்முறை.

8 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் ஷிகர் தவணுடன், மணீஷ் பாண்டே இணைந்தார். 7 பந்துகளை சந்தித்த மணீஷ் பாண்டே 6 ரன்கள் எடுத்த நிலையில் பெஹ்ரென்டார்ப் பந்தில் விக்கெட் கீப்பர் டிம் பெயினிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். விக்கெட்கள் சரிந்த நிலையில் பொறுமையை கடைபிடிக்காத ஷிகர் தவண் (2), லாவகமாக வீசப்பட்ட பந்தை தூக்கி அடிக்க அது வார்னரிடம் கேட்ச் ஆனது. பவர்பிளேவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 38 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய தோனி, ஆடம் ஸம்பா பந்தை தவறாக கணித்து கிரீஸூக்கு வெளியே வந்து விளையாட முயன்று ஸ்டெம்பிங் ஆனார். தோனி 16 பந்துகளில் 13ரன்கள் சேர்த்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய கேதார் ஜாதவ் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆடம் ஸம்பா பந்தில் போல்டானார். 67 ரன்களுக்கு 6 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுடன் புவனேஷ்வர் குமார் இணைந்தார்.

அடுத்த 3 ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. நாதன் கோல்டர் வீசிய பந்தை தெர்டுமேன் திசையில் தூக்கி அடித்து புவனேஷ்வர் குமார் (1) ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் பாண்டியா 23, குல்தீப் யாதவ் 16, ஜஸ்பிரித் பும்ரா 7 ரன்கள் சேர்த்து நடையை கட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 118 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் பெஹ்ரென்டார்ப் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து 119 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹென்ட்ரிக்ஸ் 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்களும், டிரெவிஸ் ஹெட் 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டேவிட் வார்னர் 2, ஆரோன் பின்ச் 8 ரன்கள் சேர்த்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. கடைசி ஆட்டம் வரும் 13-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.