
சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரிக்கு தேசிய அங்கீகார வாரியத்தால் கணினி பொறியியல் துறைக்கு அங்கீகாரம்
சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரிக்கு தேசிய அங்கீகார வாரியத்தால் கணினி பொறியியல் துறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி.யு. போப் பொறியியல் கல்லூரிக்கு தேசிய அங்கீகார வாரியத்தால் கணினி பொறியியல் துறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய அங்கீகாரத்தின் மூலம் கல்லூரியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது, தரமான மற்றும் அநேக மாணவர்கள் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது, மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவிகளை பெரும் அங்கீகாரமும் பெற்று உள்ளது, இக்கல்லூரியில் பயின்று வெளியேறும் மாணவர்களின் கல்வி உலக அளவில் அங்கீகரிக்கப்படுகிறது. இதற்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாயர்புரம் பாஸ்ட்ரேட் சேர்மன் குருவானவர் ஜே.மனோகர் ஆரம்ப ஜெபம் செய்து கல்லூரி தரத்தை உயர்த்தும் வகையில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆய்வகம் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஜெயா பாலிடெக்னிக் நிறுவனர் பொன்னுதுரை, கல்லூரி முன்னாள் டீன் டாக்டர்.ஐசக் பாலசிங், சாயர்புரம் பெருமன்ற உறுப்பினர் ராஜதுரை முள்ளன்வினள பெருமன்ற உறுப்பினர் பட்டுராஜன், சாயர்புரம் சேகர செயலாளர் அபிஷேகம், சேகர பொருளாளர் ஜான்சன் பொன்சிங், கல்லூரியின் கட்டிட பொறியாளர் தீபக்ராஜ், கல்லூரி துறை தலைவர்கள் டாக்டர். விஜயலட்சுமி, டாக்டர். ஜேஸ்பர்லின், செல்வரதி, ஜாக்சன், ஆனந்தி, டென்னிசன் என்.பி.ஏ ஒருங்கிணைப்பாளர் மேபல் ராஜகுமாரி ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.