Latest News
திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்?மருத்துவமனைக்குள் 6 பேர் கொலை: மாஜி ராணுவ அதிகாரியின் ரத்த வெறிஜீரோ நேரத்தில் விவாதம் : சாதனை படைத்த ராஜ்யசபாஇரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறைஊழல் வழக்கு: லாலுவுக்கு இன்று தண்டனை அறிவிப்புபாக்., இரட்டை வேடம்: அமெரிக்கா கண்டனம்நமது கலாசார அடையாளங்களுக்கு சாதி, மத, மொழிகள் ரீதியாக தடை கிடையாது கவர்னர் பன்வாரிலால் புரோகித்கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானதற்கு பிரகாஷ்ராஜ் மறுப்புபுதிய மசோதாவை கண்டித்து டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் இந்தியா முழுவதும் போராட்டம்ஆன்லைனில் விற்கும் பொருட்களில் விவரங்கள் கட்டாயம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வந்தது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

0
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து எளிய இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி  15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி 20 ஓவர்போட்டி ஐதராபாத்தில் நாளை மறுதினம் நடைபெறுகிறது.
இதற்கிடையில், நேற்று போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய அணி தோல்வி அடைந்ததால் விரக்தியில் ரசிகர்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் ஆஸ்திரேலிய அணியினர் சென்ற பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.
ஜன்னல் கண்னாடிகள் உடைந்த புகைப்படத்தை ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ஆரோன் பின்ச் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டை வார்னரும் ரீடுவிட் செய்துள்ளார். எனினும் இந்த தாக்குதல் குறித்து, பிசிசிஐ, ஐசிசி அல்லது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியோ எந்த தகவலையும் வெளியிடவில்லை.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.