Breaking News
எல்லா வளமும் பெற: வழுக்கைக்கு ரத்த அழுத்தம் காரணமா?

மனிதர்கள் இறக்கும்போது உடலுக்கு என்ன நேர்கிறது?

மரணம் அத்தனை வேகமாக நடப்பதல்ல. மெதுவாகவே நுழைகிறது. இதயம் துடிப்பதை நிறுத்திக்கொள்ளும்போது மரணம் தொடங்குகிறது. இதயத் துடிப்பு நின்றுவிடுவதால் நரம்புகளிலும் தமனிகளிலும் ரத்தம் தேங்கத் தொடங்குகிறது. இதயத் துடிப்பு நின்று ஆறு நிமிடங்களுக்குப் பிறகு மூளை சாகத் தொடங்குகிறது. பிராணவாயு கிடைக்காததாலும் ரத்தவோட்டம் இல்லாத நிலையிலும் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. மரணம் என்பது சின்னச் சின்னச் சம்பவங்களால் ஆன ஒரு சங்கிலித் தொடர்.

வழுக்கைத் தலைக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்பு உண்டா?

ஆம். உயர் ரத்த அழுத்தத்துக்கும் ஆண்களின் தலையில் வழுக்கை வருவதற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. 2007-ம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வில் 120/80-க்கு மேல் ரத்த அழுத்தம் இருந்த ஆண்களுக்கு தலையில் அதிகபட்ச முடி இழப்பு இருந்திருக்கிறது. அத்துடன் தலையுச்சியில் வழுக்கை இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியமும் அதிகம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.