Breaking News
மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..?

உங்களுக்கோ, உங்களை சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகிறது. இதிலிருந்து மீண்டு  வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக்கொள்வதும் மிக முக்கியம். ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம், இருதயத்திற்கு கிடைப்பது தடைபடும்போது  மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இருதயத்திற்கு சக்தி தரும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான். இந்த  அடைப்பில் கொழுப்பு, கால்ஷியம் மற்றும் சில பொருட்கள் கலந்து இருக்கலாம்.

பொதுவாக மாரடைப்பு என்றாலே இடது தோள் வலி, நெஞ்சை அழுத்தி பிடிக்கும் உணர்வு, திடீரென பலமின்மை, சில சமயம் நினைவின்மை, மூச்சு  வாங்குதல், வியர்த்து கொட்டுதல், வெளிர்ந்த சருமம், வயிற்றுப்பிரட்டல், வாந்தி, வலி, கை, கால்களில் வீக்கம் என பல அறிகுறிகளை காட்டிவிடும்.  ஆனால், இன்று மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக நன்கு குணம் காண முடிகின்றது. இருப்பினும் பயம் விலகவில்லை. முறையான மருந்தும்,  குறிப்பிட்ட காலம்தவறாத மருத்துவ பரிசோதனைகளும் இருந்தால், இயல்பான வாழ்க்கை என்பது சாத்தியமே. அதைவிட, வருமுன் காப்பது மிக மிக  நல்லது.

உங்கள் கொலஸ்டிரால் அளவை நன்கு கண்காணித்துக்கொள்ளுங்கள். நல்ல கொலஸ்டிரால் குறையவும் கூடாது. கெட்ட கொலஸ்டிரால் கூடவும்  கூடாது. உங்கள் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளுங்கள். கெட்டகொழுப்பு உயர் ரத்த அழுத்தத்தினையும் ஏற்படுத்தும்.  கண்டிப்பாக புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும். இது, உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். ரத்த குழாயில் அடைப்புகளை ஏற்படுத்தும். ஊறுகாய்,  அப்பளம், உப்பு சேர்த்த சாதம் வேண்டாம். பொதுவில் உப்பின் அளவினை குறையுங்கள். நிதானமாய் உடற்பயிற்சியினை ஆரம்பித்து நன்கு முடியும்  வரை செய்யுங்கள். மன அழுத்தம் இதயத்தினை வெகுவாய் பாதிக்கும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.