Breaking News
30 பர்சன்ட் கூட கிளாமர் காட்டுவதில்லை : ராஷ்மி குமுறல்

மாப்பிள்ளை விநாயகர், தவுலத் படங்களில் நடித்திருப்பவர் ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குண்டுர் டாக்கிஸ் என்ற தெலுங்கு படத்தில் ஓவர் கிளாமர் காட்டி நடித்ததாக அவர் மீது விமர்சனம் எழுந்ததுடன் அடுத்த படத்திலும் கிளாமராக நடிப்பதாக கூறப்பட்டது. அதைக்கேட்டு உர்ரான ராஷ்மி தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது,’அடுத்து நான் நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதில் கிளாமர் எதுவும் இல்லை. ரொம்பவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறேன். படம் முழுவதும் சேலை அணிந்துதான் நடிக்கிறேன். எல்லையை கடந்து கிளாமர் காட்டியிருக்கிறீர்களா? என்று பலரும் கேட்கிறார்கள்.

மற்ற நடிகைகள் காட்டுவதில் 30 சதவீதம் கிளாமர்கூட நான் காட்டுவதில்லை. ஒரு படம் ஒப்புக்கொள்வதற்கு முன்பாக அதில் நான் அணியும் உடை பற்றி இயக்குனரிடம் விவாதிக்கிறேன். போதுமான கவனத்தை எனது உடை விஷயத்தில் எடுத்துக்கொள்கிறேன். ஆபாசத்தை வெளிப்படுத்த நான் இங்கு வரவில்லை’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.