Breaking News
பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும்: இந்தியா வலியுறுத்தல்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பகுதி “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” பகுதியாக உள்ளது.
தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதி சுயாட்சி மாநிலமாக இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) இணைந்து நீண்ட காலமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த அடக்கு முறைக்கு எதிராகவும், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டியும் அங்கு போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதனால், பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் ஒன்றில் இந்தியா தரப்பில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்தியா தரப்பில் கூறப்பட்டதாவது:- “ ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் நீக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். சட்டவிரோத ஆக்கிரமிப்பை  பாகிஸ்தான் கைவிட வேண்டும்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் துன்புறுத்துதல், மற்றும் சட்டவிரோத கொலைகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். இந்து, கிறிஸ்தவ, சீக்கிய மதத்தை சேர்ந்த இளம் பெண்களை கட்டாயமாக மதம்மாற்றி இளம்வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் நடைமுறையையும் முடிவுக்கு  கொண்டு வரவேண்டும். பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பகுதிகளையும் பாகிஸ்தான் அழிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.