உலக ஹாக்கி லீக் இறுதி போட்டி: மூத்த நடுகள வீரர் சர்தார் சிங் நீக்கம்

0

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் அடுத்த மாதம் உலக ஹாக்கி லீக் இறுதி போட்டி நடைபெறுகிறது.  இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.  அந்த அணியின் விவரம்:-

கோல்கீப்பர்கள்:  ஆகாஷ் அனில் சிக்தே, சுராஜ் கர்கேரா.

தடுப்பு ஆட்டக்காரர்கள்:  ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், டிப்சன் டிர்க்கி, வருண் குமார், ருபீந்தர்பால் சிங், பிரேந்திரா லக்ரா.

நடுகள வீரர்கள்:  மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), எஸ்.கே. உத்தப்பா, சுமீத், கோத்தஜித் சிங்.

முன்கள வீரர்கள்:  எஸ்.வி. சுனில், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், குர்ஜந்த் சிங்.

அணியில் இருந்து சர்தார் சிங் நீக்கப்பட்டு உள்ளார்.  நல்ல உடற்திறனில் உள்ள ருபீந்தர்பால் சிங் மற்றும் பிரேந்திரா லக்ரா அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த வருடத்திற்கான கேல் ரத்னா விருது பெற்ற மற்றும் முன்னாள் கேப்டனான சர்தார் கடந்த மாதம் டாக்காவில் நடந்த ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெற்றவர்.  இந்த போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது.

ருபீந்தர் மற்றும் லக்ராவின் வருகை பலவீன நிலையிலுள்ள தடுப்பு ஆட்ட வீரர்கள் வரிசைக்கு அதிக ஊக்கம் அளிக்கும்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.