Breaking News
காஸ்ட்ரோ மறைந்தார் என்ற செய்தி இருதயத்தில் துன்ப ஈட்டியைச் சொருகி உள்ளது: வைகோ

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு இருந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கியூபா நேரப்படி இரவு 10.30 மணியளவில் உயிரிழந்தார். 90 வயதான பிடல் காஸ்ட்ரோ உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக அவரது சகோதரும் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்தார்.

அவரது மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

2016 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளாகிய இந்த நாள், மனிதகுலத்தின் இருதயத்தில் துன்ப ஈட்டியைச் சொருகி உள்ளது. ஆம்; உலக வரலாற்றில், யுகயுகhந்திரத்திற்கும் புகழ் படைத்த தலைவர்கள் வரிசையில், கியூபாவின் விடுதலை வேந்தன் பிடல் காஸ்ட்ரோ இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.