Breaking News
ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணிக்கு 233 ரன்கள் இலக்கு

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு-பரோடா (சி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த பரோடா அணி முதல் இன்னிங்சில் 309 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 79 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து இருந்தது. பாபா அபராஜித் 59 ரன்னும், கவுசிக் 37 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 95.3 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய பரோடா அணி 197 ரன்னில் சுருண்டது. தமிழக அணி தரப்பில் முகமது, கே.விக்னேஷ் தலா 3 விக்கெட்டும், யோமகேஷ் 2 விக்கெட்டும், சாய்கிஷோர், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய ஆட்டம் முடிவில் தமிழக அணி 2-வது இன்னிங்சில் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.