மல்லையா சொத்துக்களை ஏப். 2018-ம் வரை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவு

0

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை ஏப்ரல் 2018 வரை முடக்க லண்டன் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு லண்டன் தப்பியோடினார். லண்டன் தப்பியோடிய மல்லையாவை நாடு கடத்தி கொண்டுவர வெஸ்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் இ்ந்தியா முயற்சி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் 13 வங்கிகள் சார்பில் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 2018 ஏப். 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் அதுவரை மல்லையா சொத்துக்களை முடக்கிவைத்தவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் மற்றொரு வழக்கின் விசாரணை வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோட்டில் டிசம்பர் 20-ம் தேதி நிறைவடைகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.