நிரவ் மோடி உருவ பொம்மை எரித்து ஹோலி கொண்டாட்டம்

0

மும்பை, வங்கியில் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய, வைர வியாபாரி, நிரவ் மோடியின், 58 அடி உருவப் பொம்மையை எரித்து, மும்பை மக்கள், ஹோலி பண்டிகை
கொண்டாடினர்.
வைர வியாபாரி, நிரவ் மோடி, மும்பையில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். இதனால்,
நிரவ் மோடி மீது, நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். மும்பையில் நேற்று நடந்த, ஹோலி கொண்டாட்டத்தில், மக்களின் கோபம் எதிரொலித்தது.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாள், தீயவைகளை எரிக்கும் விதமாக, மரக்கட்டைகளை எரிப்பது வழக்கம். மும்பையின், வொர்லி பகுதியில், ஆண்டுதோறும், சமூக பிரச்னைகளை மையப்படுத்தி, ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு, நிரவ் மோடியின், 58 அடி உருவ பொம்மையை செய்து, அதை எரித்து ஹோலியை கொண்டாடினர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.