சென்னையில் சித்த மருத்துவர் வீடு-ஆஸ்பத்திரியில் வருமானவரித்துறை சோதனை

0

சென்னையில் பிரபல சித்த மருத்துவரான சி.என்.ராஜதுரை கோடம்பாக்கம், கங்காநகர், சிவன்கோவில் தெருவில் சி.என்.ஆர்.ஹெர்ப்ஸ் என்ற பெயரில் தோல் நோய்களுக்கான சித்த மருத்துவ ஆஸ்பத்திரியை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

அதனடிப்படையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சித்த மருத்துவ ஆஸ்பத்திரி மற்றும் தியாகராயநகரில் உள்ள அவருடைய வீட்டில் 6 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் 2 இடங்களில் சோதனை நடந்தபோது அவருக்கு சொந்தமாக டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் எர்ணாகுளம் ஆகிய 5 இடங்களில் உள்ள சித்த மருத்துவ ஆஸ்பத்திரிகளிலும் நேற்று ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதில் மருந்து விற்பனை தொடர்பான சில ஆவணங்கள் கிடைத்துள்ளது.

விசாரணைக்கு பின்னர் தான் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது? என்பது குறித்த விவரம் தெரிய வரும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.