ஏலத்திற்கு வரும் நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம்

0

நடிகை ஶ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாய் நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவால் சினிமா திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஶ்ரீதேவியின் உடல் பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு மும்பை கொண்டுவரப்பட்டு நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
சினிமா திரையுலகில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கி, பின் ஹீரோயினாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து, பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக விளங்கினார்.

இந்நிலையில் மறைந்த நடிகை ஶ்ரீதேவி ஓவியம் வரைவதிலும் அதிகமாக ஆர்வம் காட்டினாராம். அவர் வரைந்த ஓவியம் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக கொடுத்துள்ளார். அது விரைவில் துபாயில் ஏலத்திற்கு வரவுள்ளது. 10 லட்ச ரூபாய்க்கும் மேல் அது விலைபோகலாம் என கூறப்படுகிறது. அந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.