Breaking News
அஜித்தின் அடுத்த படத்தை இயக்கக் காத்திருக்கும் இயக்குநர்கள்…

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதற்காக மூன்று இயக்குநர்கள் கதை சொல்லி காத்திருக்கிறார்களாம்.

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ சங்கர் என மூன்று காமெடியன்கள் நடிக்கின்றனர். டி.இமான் முதன்முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இது அஜித்தின் 58வது படம்.

அஜித்தின் 59வது படத்தை இயக்க, மூன்று இயக்குநர்கள் கதை சொல்லிக் காத்திருக்கிறார்களாம். ஒருவர், ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத். மற்ற இரண்டு பேர் ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி.

இரண்டு கதைகளையும் கேட்ட அஜித், இன்னும் தன் முடிவைச் சொல்லவில்லையாம். எனவே, இந்த இரண்டு டீமில் ஒன்றுதான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது உறுதி என்கிறார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.