தீவிரவாதிகள் யார்? என்பதை நாட்டுக்கு ரஜினிகாந்த் அடையாளம் காட்டவேண்டும் மு.க.ஸ்டாலின்

0

தீவிரவாதிகள் யார்? என்பதை நாட்டுக்கு ரஜினிகாந்த் அடையாளம் காட்டவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:–

நானும் அதை தொலைக்காட்சியில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையிலும், அது அவருடைய சொந்த குரலா? என்பது ஒரு சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இதன் பின்னணி குரலாக, ஏற்கனவே பா.ஜ.க. சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் இதை சொல்லிக்கொண்டிருக்கிறது.

எனவே, அந்த குரலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும், அவர் சூப்பர் ஸ்டார். அவரே தீவிரவாதிகள் எனக்கு தெரியுமென்று சொல்லியிருக்கின்ற காரணத்தால், அந்த தீவிரவாதிகள் யார்? என்பதை நாட்டுக்கு அடையாளம் காட்டினால், நாட்டுக்கு அது நல்லதாக அமையும். அதை அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதுமட்டுமல்ல வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. இந்தி எதிர்ப்பு போராட்டமாக இருந்தாலும் சரி, சுதந்திர போராட்டமாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டமாக இருந்தாலும் சரி எல்லாமே போராட்டங்கள் நடத்தியே காரியங்கள் சாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.