‘காட்டுப் பய சார் இந்த காளி’ படத்தில் அறிமுகமான ராஜஸ்தான் நடிகை!

0

யுரேகா இயக்கத்தில் உருவாகும்;காட்டுப் பய சார் இந்த காளி; படத்தில் ராஜஸ்தான் நடிகை ஐரா ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார்.

மதுரை சம்பவம், தொப்பி;சிவப்பு எனக்கு பிடிக்கும்; ஆகிய படங்களை இயக்கியவர் பாடலாசிரியர் யுரேகா. தற்போது இவர் இயக்கி வரும் படம் காட்டுப்பய சார் இந்த காளி. இந்தப் படத்தில் ஜெய்வந்த், ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, அபிஷேக் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்தின் நாயகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஐரா அறிமுகமாகியுள்ளார்.

படம் குறித்து இயக்குனர் யுரேகா கூறுகையில், தமிழ்நாட்டில் கொலை மற்றும் கொள்ளைகளில் அதிகமாக ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் வட நாட்டவர்களாகவே இருக்கிறார்கள். வடநாட்டு பெரும் கோடீஸ்வரர்கள், பைனான்ஸ் என்ற பெயரில் தமிழ் மக்களிடம் பணத்தை வட்டியாக உறிஞ்சுகிறார்கள். இந்த நிலை நீடித்தால் தமிழ்நாடு என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை. இதில் நடிக்க பல நடிகைகளை அணுகினோம். யாரும் முன்வரவில்லை. இறுதியாக வந்தவர் தான், ஐரா. அவர் ராஜஸ்தான் நடிகை என்றார்..

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.