காவலர் தேர்வில் முறைகேடு உத்தரபிரதேசத்தில் 19 பேர் கைது

0

உத்தரபிரதேசத்தில் நேற்று தொடங்கிய காவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 19 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் 41,520 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் இரண்டு நாட்கள் இந்த தேர்வு நடைபெறவுள்ளது. இதில், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 56 மாவட்டங்களில் மொத்தம் 860 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது மைக்ரோ செவித்திறன் கருவிகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மொத்தம் 19 பேரை சிறப்பு அதிரடிப் படை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இவர்களுக்கு உதவி செய்தது யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.