காலா தோல்வி? 2.0 நிலை என்ன?

0

சூப்பர் ஸ்டார் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் காலா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.

காலா திரைப்படம் தமிழில் வெற்றி பெற்ற நிலையில், இந்தி மற்றும் தெலுங்கில் வெற்றி பெறவில்லை. ரஜினிக்காக தமிழ் மக்கள் கதையை ஏற்கொண்டாலும், இந்த கதையம்சம் மற்ற இரண்டு மொழி மக்களுக்கும் ஏற்றதாக இல்லை.

காலா படத்தின் தோல்வி தாக்கம் ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் 2.0 படத்தின் மீது திரும்பியுள்ளது. ஆம, சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் 2.0 வெளியீடு அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் இந்தப் படத்தை அதிக விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளனர். தற்போது காலா தெலுங்கில் வெற்றி பெறாததால், கொடுத்த முன்பணத்தை விநியோகஸ்தர்கள் திரும்பக் கேட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டே 2.0 திரைக்கு வர இருப்பதாலும், தற்போது காலா நஷ்டத்தை ஈட்டுகட்டவும் 2.0 படத்திற்கு கொடுக்கப்பட்ட முன் பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்கப்பட்டுள்ளதாம்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.