நடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி

0

தன்னையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த தயாரிப்பாளர் கிஷனும், அவரது மனைவியும் அழைத்தார்கள் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்காவுக்கு அழைத்து அங்கு அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சில நடிகைகளிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கிஷனும், அவரது மனைவியும் என்னை கூட அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களுக்கு எடுபுடி வேலை பார்க்க ஹைதராபாத்தில் ஆள் உண்டு. அமெரிக்கா செல்லும் நடிகைகளுக்கு விசா உள்ளிட்ட அனைத்துக்கும் அவர்களே ஏற்பாடு செய்வார்கள் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

நடிகைகளின் பிரபலத்திற்கு ஏற்ப அவர்களுக்கு ரூ. 68 ஆயிரம் முதல் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் வரை பணம் கொடுத்தார்கள். அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் விபரம் என்னிடம் உள்ளது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிஷன் என்னை கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்கா வருமாறு அழைத்தார். ஆனால் அவர் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் வர முடியாது என்று நான் கூறியும் என் புகைப்படத்தை போஸ்டரில் வெளியிட்டிருக்கிறார் என்று நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனசுயா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகள் விபச்சார வழக்கில் சிக்கியுள்ளனர். இதனால் அமெரிக்கா செல்லும் அனைத்து தெலுங்கு நடிகைகளிடமும் விமான நிலையத்திலேயே விசாரணை நடத்துகிறார்களாம்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.