Breaking News
பாலை விட கோமியத்திற்கு ‘கிராக்கி’

கூடுதல் விலை

ராஜஸ்தானில், பசு வளர்க்கும் விவசாயிகள், பாலை லிட்டருக்கு 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். தொடர்ந்து , கிர் மற்றும் தர்பார்கார் போன்ற உயர் ரக பசுக்களை வளர்ப்போர், அதன் கோமியத்தை விற்பனை செய்து வருகின்றனர். அது லிட்டருக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
உதய்ப்பூரில் உள்ள மஹாராணா பிரதாப் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம், இயற்கை விவசாய திட்டத்திற்காக மாதந்தோறும் 300 முதல் 500 லிட்டர் பசு கோமியத்தை வாங்கி வருகிறது. இதற்காக மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறது.

இரவில் விழித்திருந்து

இது தொடர்பாக கைலாஷ் குஜ்ஜார் என்பவர் கூறுகையில், பசு கோமியத்தை விற்க துவங்கிய பிறகு, எனது வருமானம் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. ரசாயன உரங்களுக்கு மாற்றாக, பசு கோமியம் இயற்கை உரமாக பயன்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காகவும், மத சடங்குகளுக்கும் பசு கோமியத்தை பயன்படுத்தி வருகின்றனர். பசு கோமியம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக இரவு முழுதும் விழித்திருந்து அதனை பிடித்து வருகிறோம். பசுவை தாய் போல் கருதுகிறோம். இதனால், இரவில் விழித்திருப்பது குறித்து கவலைப்படுவதில்லை என்றார்.
ஜெய்ப்பூரை சேர்ந்த பால் வியாபாரி ஓம் பிரகாஷ் மினா கூறுகையில், ஒரு லிட்டர் பசு கோமியத்தை லிட்டருக்கு 30 ரூபாய் முதல் வரை 50 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். இயற்கை விவசாயிகளிடம், இதற்கு அதிக வரவேற்பு உள்ளது. பயிர்கள், பூச்சி தாக்குதலில் இருந்து அகற்ற பயன்படும் என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.