Latest News
ரயில் விபத்தில் 50 பேர் பலி ?சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்: யார் இந்த பெண்கள் முழு விவரம்?சபரிமலைக்குள் செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா! போலீஸ் மீது அரசு காட்டம்பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம், பதற்றம் அதிகரிப்புஅமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்"இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர்"- இலங்கை மந்திரி சாமிநாதன்ஆன்-லைனில் முன்பதிவு செய்தவருக்கு செல்போனுக்கு பதிலாக செங்கல் வந்ததால் அதிர்ச்சி போலீசார் விசாரணைசபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக உள்ளது : தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தம் என அறிவிப்புமீடூ விவகாரம்; மத்திய மந்திரி அக்பர் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு திடீர் விலகல்

0

இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டியில் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் மொத்தம் 194 கிலோ எடை தூக்கி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

மணிப்பூரை சேர்ந்த 23 வயதான மீராபாய் சானு, இந்தோனேஷியாவில் வருகிற 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடைபெறும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய பளுதூக்குதல் அணியில் இடம் பிடித்து இருந்தார். இந்த போட்டிக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது முதுகுவலி பிரச்சினை ஏற்பட்டது. இந்த காயத்துக்காக அவர் பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றாலும், காயத்தின் தன்மை குறித்து துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் மீராபாய் சானு இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘காயத்தில் இருந்து மீண்டு வரவும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு தயாராகவும் எனக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய பளுதூக்குதல் அணியின் தலைமை பயிற்சியாளர் விஜய் சர்மாவும், மீராபாய் சானுவின் காயம் குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு அறிக்கை அளித்துள்ளார். அதில் முக்கியமான ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு முன்பாக காயத்தில் இருந்து மீண்டு வர மீராபாய் சானுவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளன பொதுச்செயலாளர் செக்தேவ் யாதவிடம் கேட்ட போது, ‘ஆசிய விளையாட்டு போட்டியில் மீராபாய் கலந்து கொள்ளப்போவதில்லை என்பது உண்மை தான். இது குறித்து மத்திய விளையாட்டு துறைக்கு அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்படும்’ என்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மீராபாய் சானு போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி துர்க்மெனிஸ்தானில் வருகிற நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.