ஜாம்பவான் அந்தஸ்தை கோலி நெருங்கி விட்டார் டோனி சொல்கிறார்

0

மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட “டோனி” பிறகு அளித்த பேட்டியில், ‘விராட்கோலி மிகச்சிறந்த வீரர். அவர் ஏற்கனவே ஒரு அந்தஸ்தை அடைந்து விட்டார். விராட்கோலி ஜாம்பவான் அந்தஸ்தை ஏறக்குறைய நெருங்கி விட்டார். அவரை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில வருடங்களாக அவர் உலகின் எந்தவொரு இடமாக இருந்தாலும் அருமையாக விளையாடி வருகிறார். அவர் இந்திய அணியை நன்றாக முன்னெடுத்து செல்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரின் போது நடுவரிடம் இருந்து நான் பந்தை வாங்கி சென்றது நமது அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரிடம் காட்டுவதற்காக தான். ஓய்வு பெறுவதற்காக அல்ல. அடுத்த ஆண்டு உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் பந்தின் தன்மையை ஆய்வு செய்து அதற்கு தகுந்தபடி திட்டமிடுவதற்கு தான் பந்தை வாங்கினேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி வெல்லுமா? என்று கேட்கிறீர்கள். டெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் வெற்றி பெற முடியும்’ என்று தெரிவித்தார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.