டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி

0

துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததுடன், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் உயர்த்தியது. இதன் காரணமாக துருக்கியின் பணமதிப்பு வெகுவாக சரிந்து, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு 70.1 ஆக இருந்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து இருந்தது. பின்னர் வர்த்தக நேர முடிவில் 69.90 ஆக இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்குஎதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்றைய மதிப்பை விட 43 காசுகள் குறைந்து தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு 70.32 ஆக உள்ளது.இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது நமது நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தும். அந்நியச்செலாவணி சந்தையில் சில கட்டுப்பாடுகளை விதித்து டாலர் கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.