Breaking News
வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 93, உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர்காக்கும் கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை கூறியுள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஜூலை, 11ல், டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா ஆகியோர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றனர்.
இந்நிலையில், வாஜ்பாயின் உடல் நிலை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், வாஜ்பாய், கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எதிர்பாராத விதமாக கடந்த 24 மணி நேரத்தில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிர்காக்கும் கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளன எனக்கூறப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.