Breaking News
கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவிட சவுதி அரேபிய அரசு முடிவு

கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவிட சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. உதவி குழு அமைத்திட தேசிய அவசர அமைப்புக்கு சவுதி அரசு உத்தரவிட்டது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு, ஊருக்குள் புகுந்துள்ளது. இதில், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு உச்சக்கட்ட அபாயம் நீடிக்கிறது. கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 324 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை.

நிவாரண முகாம்களில் 2.5 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளம், பத்தினம் திட்டா, திரிச்சூர் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பல ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. இந்நிலையில் பலரும் உதவி செய்து வருகின்றனர். நிவாரண பொருட்கள், நிதயுதவி அளித்து வருகின்றன. உதவி குழு அமைத்திட தேசிய அவசர அமைப்புக்கு சவுதி அரசு உத்தரவிட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.