என்.எஸ்.ஜி.,யில் உறுப்பினராக இந்தியாவுக்கு முழு தகுதி

0

எஸ்.ஜி. என்ற அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராக இந்தியாவிற்கு முழு தகுதி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் தற்போது 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த குழுவில் இடம் பெற இந்தியாவும், பாகிஸ்தானும் விண்ணப்பித்துள்ளன. இதில் உறுப்பினரால் அணு மின் உற்பத்தியை மேம்படுத்த முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு கை கொடுக்கும் என்பதால், அந்த குழுவில் இடம் பெற இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சில மாதங்களாக பல நாடுகளுக்கு சென்று பிரதமர் மோடி ஆதரவு திரட்டி வந்தார்.
இதன் விளைவாக என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், அர்ஜெண்டினா, தென்கொரியா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ரஷியா ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட, புதிய உறுப்பினரை சேர்க்க முடியாது. எனவே எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைப் பெற இந்தியா தீவிர முயற்சிகளில் இறங்கியது.
இந்த குழுவில் உள்ள சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவை சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால் சீனா எதிர்ப்பு காட்டி வருகிறது.இந்த நிலையில், அணுசக்தி விநியோக குழுவில் இடம் பெற இந்தியாவுக்கு முழு தகுதி இருப்பதாகவும், சீனாவின் எதிர்ப்பால் இந்தியாவில் இடம் பெற முடியவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு முழு ஆதரவளிப்பதாகவும், என்.எஸ்.ஜியில் இந்தியாவை உறுப்பினராக்க முழுவீச்சில் செயல்படுவோம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.