Breaking News
நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல : சுப்ரீம் கோர்ட்டு கருத்து

ஆந்திர மாநிலத்தில் டிரைமெக்ஸ் குரூப் என்ற தனியார் நிறுவனம் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மத்திய அரசின் முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதையடுத்து, அந்நிறுவனம் சுரங்கத் தொழிலை நிறுத்தி வைக்க ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் பயந்து போய், தங்களது நிறுவனத்துக்கு எதிராக ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல. எங்களைப் பார்த்து மாநிலங்கள் பயப்பட வேண்டாம்’’ என்று கூறினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.