Breaking News
சாய்னா நெவால் தோல்வி

ஹாங்காங் பாட்மிண்டனில் இந்தியாவின் சாய்னா நெவால் கால் இறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஹாங்காங்கின் ஷெங்கனை எதிர்த்து விளை யாடிய அவர் 8-21, 21-18, 19-21 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார்.

அதேவேளையில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் அவர் 21-17, 21-23, 21-18 என்ற கணக்கில் போராடி சிங்கப்பூரின் லியாங்கை தோற்கடித்தார்.

இதற்கிடையே உலக பாட்மிண்டன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சீன ஓபனில் பட்டம் வென்ற சிந்து இரு இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். அடுத் தடுத்து தோல்விகளை சந்தித்த சாய்னா 6-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.