Latest News
3 நாட்களுக்கு வறண்ட வானிலை‘பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம்’ - இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடிவிடிவு! 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறுபுல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்அமித்ஷா சென்னை வருகை ரத்துமோசடி மேல் மோசடிகள்... விசாரணைமேல் விசாரணைகள்: 2020 தேர்தல் வரை தாங்குவாரா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்?கிரண்பேடியை மாற்றனும்: உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சபாநாயகர் கடிதம்பிரதமர் வங்கிகளை கேள்வி கேட்காதது ஏன்? : விஜய் மல்லையாதமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்தமிழகத்தில் 4 முனைப்போட்டிக்கு வாய்ப்புகூட்டணி அமைக்க அ.தி.மு.க., தி.மு.க. மும்முரம்தொகுதிகள் பிரிப்பதில் இழுபறி

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி “சாம்பியன்”

0

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வந்தது. இதில் டாக்காவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையுடன் மோதியது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் அனுஜ் ரவாத் (57 ரன், 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெய்ஸ்வால் (85 ரன், 113 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் அரைசதம் அடித்து சூப்பரான தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 31 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதன் பின்னர் கேப்டன் சிம்ரன் சிங்கும், அயுஷ் படோனியும் கடைசி கட்டத்தில் வெளுத்து வாங்கினர். சுழற்பந்து வீச்சாளர் துல்ஷானின் ஒரே ஓவரில் படோனி 4 சிக்சர்களை பறக்க விட்டு பிரமாதப்படுத்தினார். வேகப்பந்து வீச்சாளர் நிபுன் மலிங்காவின் ஓவரில் சிம்ரன் சிங் 3 சிக்சர்கள் விரட்டியடித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் அவர்கள் 79 ரன்களை திரட்டினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. கேப்டன் சிம்ரன் சிங் 65 ரன்களுடனும் (37 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), படோனி 52 ரன்களுடனும் (28 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 38.4 ஓவர்களில் 160 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மதுஷ்கா பெர்னாண்டோ 49 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் தியாகி 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சித்தார்த் தேசாய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷ் தியாகி ஆட்டநாயகன் விருதையும், மொத்தம் 318 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

8 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இந்திய அணி தோல்வி பக்கமே செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பையை இந்திய ஜூனியர் அணி உச்சிமுகர்வது இது 6-வது முறையாகும். சமீபத்தில் சீனியர் ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய அணி பட்டத்தை வென்றது நினைவு கூரத்தக்கது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.