Latest News
குழந்தையை மறந்து விமானநிலையத்தில் விட்டுவிட்டு விமானத்தில் பறந்த பெண்: திரும்பிய விமானம்யூடியுப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவிக்க முயன்ற கர்ப்பிணி, குழந்தை உயிரிழப்புவிமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து செயலர் இன்று அவசர ஆலோசனைமாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க சென்னை வந்தார் ராகுல்காந்திபொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலிஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்சென்னை விமான நிலையத்திற்கு "ரெட் அலர்ட்"ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

‘96’ படத்துக்கு எதிராக விஷால் செயல்பட்டாரா? நடிகர் விஜய் சேதுபதி பேட்டி

0

விஜய் சேதுபதி-திரிஷா ஜோடியாக நடித்துள்ள ‘96’ படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை படக்குழுவினர் சென்னையில் நடத்தினார்கள்.
விஜய் சேதுபதியிடம் ‘96 படம் நிதி நெருக்கடியில் சிக்கியது குறித்தும் படம் வெளியாவதை விஷால் தடுக்க முயற்சி செய்ததாக வெளியான தகவல் குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து விஜய் சேதுபதி கூறியதாவது:–
‘‘என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். விஷால் நல்ல மனிதர். அவரை குறை சொல்லவில்லை. தவறு யார் மீதும் இல்லை. விஷால் சூழல் என்னவோ? அவர் எவ்வளவு ரூபாய்க்கு வட்டி கட்டுகிறாரோ? அவருக்கு என்ன நடந்ததோ? யாருக்கு தெரியும்.

எனக்கு அவர் மீது துளியும் வருத்தம் இல்லை. அது எனக்கு தவறாகவே தெரியவில்லை. அவர் இதற்கு முன் எவ்வளவு பணத்தை விட்டுக் கொடுத்தாரோ? அதெல்லாம் அவருக்கு மட்டும் தான் தெரியும். தற்போது இந்த பணத்தையும் அவர் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இதுவே அவருடைய பெரிய மனது. அதனால் வருத்தப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.

அன்று நான் செஸ் போர்டு காயாக விளையாடப்பட்டேன். இதற்கு யார் மீது பழி சுமத்துவீர்கள்? சீமராஜாவிற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்று தெரியும். நடிகர் விமலுக்கு என்ன நடந்தது தெரியும்.

இது எல்லோருக்கும் நடக்கும் இயல்பான வி‌ஷயம். அதற்காக நான் பைனான்சியர்கள் மீது குறை சொல்லவில்லை. ஒரு தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் பணம் தான் அடையாளம். அதே போல் நடிகர்களான எங்களுக்கு படம் தான் மரியாதை. படம் வெளியாகவேண்டும். அது தான் முக்கியம்.’’

இவ்வாறு விஜய்சேதுபதி கூறினார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.