Latest News
3 நாட்களுக்கு வறண்ட வானிலை‘பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம்’ - இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடிவிடிவு! 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறுபுல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்அமித்ஷா சென்னை வருகை ரத்துமோசடி மேல் மோசடிகள்... விசாரணைமேல் விசாரணைகள்: 2020 தேர்தல் வரை தாங்குவாரா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்?கிரண்பேடியை மாற்றனும்: உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சபாநாயகர் கடிதம்பிரதமர் வங்கிகளை கேள்வி கேட்காதது ஏன்? : விஜய் மல்லையாதமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்தமிழகத்தில் 4 முனைப்போட்டிக்கு வாய்ப்புகூட்டணி அமைக்க அ.தி.மு.க., தி.மு.க. மும்முரம்தொகுதிகள் பிரிப்பதில் இழுபறி

சீன ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி ‘சாம்பியன்’

0

சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் அனஸ்டசிஜா செவஸ்தோவாவை (லாத்வியா) எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வோஸ்னியாக்கி 6-3, 6-3 என்ற நேர் செட்டில் செவஸ்தோவாவை தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆட்டம் 1 மணி 27 நிமிடங்கள் நடந்தது. இந்த தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் அசத்திய வோஸ்னியாக்கிக்கு ரூ.11 கோடி பரிசுத்தொகையுடன் 1,000 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. இது அவரது 30-வது சர்வதேச பட்டமாகும். 2-வது இடம் பிடித்த செவஸ்தோவாவுக்கு ரூ.5½ கோடி பரிசாக வழங்கப்பட்டது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.