Latest News
விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை அமைக்க கூடாதுஅரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த அடுத்த நாள்“ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார்”தமிழருவி மணியன் பேட்டி4 சட்டமன்ற தொகுதி மக்கள் பயன் அடையதமிழக அரசின் சாதனைகள் என்னென்ன?ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பட்டியல்ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: 1 மணி நேரம் வாக்கு இயந்திரம் பழுது, சரிபார்க்கப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப்பதிவுபயங்கரவாத இயக்கத்துடன் நேரடி தொடர்பு: இலங்கை பள்ளி முதல்வர், ஆசிரியர் கைதுஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்து 5 குழந்தைகள் பலிடயானா மரணம்: மவுனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் ராகுல்காந்தி மற்றும் சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்புநாடாளுமன்ற தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு7-வது இறுதிக்கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் விறு விறு வாக்குப்பதிவு

‘பேட்ட’ படத்தின் சண்டை காட்சி வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி

0

ரஜினிகாந்த், ‘பேட்ட’ படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, குரு சோமசுந்தரம், நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூன் பகுதிகளில் நடந்தது. இப்போது லக்னோவில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

‘பேட்ட’ படத்தின் காட்சிகளை சிலர் திருட்டுத்தனமாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளையும் அவரது தோற்றங்களையும் செல்போனில் படம்பிடித்து வெளியிட்டனர். அதன்பிறகு விஜய் சேதுபதி துப்பாக்கியுடன் ஆவேசமாக செல்லும் வீடியோ ஒன்று வெளியானது.

இப்போது ரஜினிகாந்த் வில்லன்களை அடித்து துவைக்கும் சண்டை காட்சியும் வீடியோவாக இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். எதிர் வீட்டு மாடியில் நின்று யாரோ இந்த காட்சியை படம்பிடித்து வெளியிட்டு உள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘பேட்ட’ வீடியோ காட்சியை பரப்ப வேண்டாம் என்று படத்தின் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் கதையும் கசிந்து விட்டது என்றனர். பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகமாக தயாராவதாகவும் கூறப்பட்டது. ரஜினிகாந்த் தாதாவாகவும் கிராமத்தில் வேட்டி–சட்டையில் வசிக்கும் எளிய மனிதராகவும் இரு தோற்றங்களில் நடிப்பதாக பேசப்படுகிறது.

பேட்ட படக்காட்சிகள் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். அடையாள அட்டையுடன் வருபவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.