Latest News
3 நாட்களுக்கு வறண்ட வானிலை‘பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம்’ - இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடிவிடிவு! 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறுபுல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்அமித்ஷா சென்னை வருகை ரத்துமோசடி மேல் மோசடிகள்... விசாரணைமேல் விசாரணைகள்: 2020 தேர்தல் வரை தாங்குவாரா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்?கிரண்பேடியை மாற்றனும்: உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சபாநாயகர் கடிதம்பிரதமர் வங்கிகளை கேள்வி கேட்காதது ஏன்? : விஜய் மல்லையாதமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்தமிழகத்தில் 4 முனைப்போட்டிக்கு வாய்ப்புகூட்டணி அமைக்க அ.தி.மு.க., தி.மு.க. மும்முரம்தொகுதிகள் பிரிப்பதில் இழுபறி

வங்கக்கடலில் ‘தித்லி’ புயல் உருவானது தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும்

0

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறி உள்ளது. அந்த புயலுக்கு ‘தித்லி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. அந்த புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கில் 530 கி.மீ. தூரத்திலும், ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்திற்கு தென்கிழக்கில் 480 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டு உள்ளது.

இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அது நாளை (வியாழக்கிழமை) காலை கலிங்கபட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

மழை அளவு

திருப்பூர் 11 செ.மீ., வாடிப்பட்டி 9 செ.மீ., அவினாசி, சேலம், மேட்டுப்பாளையம், தர்மாபுரம், போடிநாயக்கனூர், சோழவந்தான், கோபிசெட்டிப்பாளையம், திருச்செங்கோடு, நெய்வேலி தலா 6 செ.மீ., கெய்ட்டி, ஊட்டி, சின்னக்கல்லார், அரவக்குறிச்சி, முதுகுளத்தூர், வந்தவாசி, தர்மபுரி தலா 5 செ.மீ., ஸ்ரீமுஷ்ணம், செண்டாமங்கலம், நாமக்கல், விருத்தாசலம், கோத்தகிரி, தேவலா தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 120 இடங்களுக்கு மேல் மழை பெய்தது.

‘தித்லி’ புயல் காரணமாக சென்னை, எண்ணூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பனில் நேற்று இரவு 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.