உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ; 5 பேர் பலி, பலர் காயம்

0

உத்தர பிரதேச மாநிலத்தின் ரேபரலி அருகே ஹர்சந்த்பூர் ரயில்வே நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில், நியூ பரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், வாரணாசியில் இருந்து மீட்புக்குழு விரைந்துள்ளது. ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு ரயில்வே வாரிய தலைவர் அஷ்வினி லோஹனி விரைந்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து செய்ய வேண்டும் ,தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.