ஆட்டம் போட்ட இந்துஅறநிலையத்துறை கூடுதல் ஆணையம் கவிதா பனி இடைநீக்கம் !!

0

சோமஸ்கந்தர் தங்க சிலையில் முறைகேடு

ஆட்டம் போட்ட இந்துஅறநிலையத்துறை கூடுதல் ஆணையம் கவிதா பனி இடைநீக்கம் !!

காஞ்சிபுரக்ம் நகரில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்றானது ஏகாம்பரநாதர் திருக்கோவில் இக்கோவில் சேலை ஆண்டுகளுக்கு முன்பு சோமஸ்கந்தர் சிலையில் பழுது ஏற்பட்டதால் புதிதாக தங்க சிலை நிர்மாணிக்க முடிவு எடுக்கப்பட்டது புதிதாக அமைக்கப்பட்ட இந்த தங்க சிலையில் பெரும் அளவில் முறைகேடு நடந்து உள்ளதாகவும் இதைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கிட பக்தர்கள் கோரிக்கை வைத்தனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ ஜி ஏ.ஜி.பொன்மணிக்கவேல் தலைமையில்லான போலோஸ் குழுவினர் துருவித் துருவி நேர்மையான விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சோமஸ்கந்தர் சிலையில் தங்கத்தையே பயன்படுத்தாமல் போலி தங்கத்தை பயன் படுத்தி சிலையை உருவாக்கினதாகவும் மேலும் 5.5 கிலோ தங்கத்தையும் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டுபிடிக்கப்பட்டன மேலும் இந்த முறைகேட்டில் எனது அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் கவிதா நேரடியாக ஈடுபட்டதை கண்டுபிடித்து அவரை கைதுசெய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்துவிட்டார். இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கவிதாவை ஏன் பணியிடைநீக்கம் செய்யக்கூடாது. என கேள்வி எழுப்பினர் உயர்நீதிமன்றமும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதால் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்திரவு பிறப்பித்தது நெல்லை மாவட்டம் விக்கிரம சிங்கபுரம் பகுதியை சேர்த்த கவிதா சர்வ வல்லமை படைத்த ஒரு கோல் ஓவர் ஆட்டம் போட்டு பலகோடி ரூபாய் மோசடி செய்து சினிமா படம் எடுத்துள்ளார்.இவரது சொத்து முழுவதையும் பறிமுதல் செய்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பத்திர பதிவு செய்யவேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.