Breaking News
சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, காங்கிரசார் இரட்டை வேடம் போடுகின்றனர் சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதாவினரும், காங்கிரசாரும் இரட்டை வேடம் போடுவதாக சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டி உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற உள்ள தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன். தமிழக அரசியல் சூழ்நிலை, கூட்டணி தொடர்பாக பேசினோம். இந்திய அளவில், அந்தந்த மாநிலங்களில் மாநில கட்சிகள் இது போன்ற ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி கேரள அரசு சபரிமலை அய்யப்பன் கோவிலை திறந்து வைத்து உள்ளது. மத்திய அரசு தமிழகம், கேரளா, கர்நாடக டி.ஜி.பி.களை அழைத்து, இது போன்ற போராட்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று உள்ளார். ஆனால், கேரளாவில் உள்ள காங்கிரசார் பா.ஜனதாவினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜனதாவினரோ சபரிமலையின் புனித தன்மை, மரபுகளை காக்க போராடவில்லை. அரசியலுக்காகவே போராட்டம் நடத்துகின்றனர்.

பெண்கள் முன்னுரிமைக்காக முத்தலாக் பிரச்சினையை வரவேற்ற பா.ஜனதாவினர் சபரிமலை விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது முரண்பாடாக உள்ளது. பா.ஜனதாவினர், காங்கிரசார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சபரிமலை விஷயத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர். சபரி மலையில் சில சமூக விரோதிகள் புகுந்துள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகி றது. இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். தோல்வியைத் தான் தழுவி உள்ளது.

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான பேரணிக்கு மம்தா பானர்ஜி எங்களுக்கு அழைப்பு தரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.