Breaking News
சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை தேவை ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,

சர்க்கஸ் கூடாரத்தினுடைய ‘ரிங் மாஸ்டர்’ யார் என்று கேட்டீர்கள் என்றால், டெல்லியில் இருக்கக்கூடிய மோடி மஸ்தான். நான் மோடியை சொல்லவில்லை, ‘ரிங் மாஸ்டரை’ மோடி மஸ்தான் என்று தான் சொல்லுவார்கள் எப்போதும், அந்த ‘ரிங் மாஸ்டர்’ இன்றைக்கு டெல்லியில் இருக்கிறார்.
அதுவும், சர்க்கஸ் கூடாரத்திலே எடுபிடியாக இருக்கக்கூடிய பழனிசாமி என்ன வேடம் போட்டிருக்கிறார் என்று சொன்னால் கோமாளி வேடம். கோமாளியை பார்த்தீர்கள் என்றால், அப்பப்போ இடையிடையே வந்து சிரிப்பை மூட்டிவிட்டு நகைச்சுவையை தந்துவிட்டு மகிழ்ச்சியை தந்துவிட்டு போய்விடுவார் என்று கூறினார்.

இதற்கு இன்று சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை தேவை என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்தார். சர்க்கஸில் திறமை இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும். சாதாரணமாக யாரும் பங்கேற்க முடியாது என கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.