Breaking News
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு: ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் ரஷியா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்புக்குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலிலும் ரஷிய தலையீடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய நாட்டைச் சேர்ந்த எலினா அலெக்சீவ்னா குஸ்யாய்நோவா (வயது 44) என்ற பெண் மீது முதன்முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசியல் அமைப்பில் குழப்பம் விளைவிக்கும் ஒரு திட்டத்துக்கான தலைமை கணக்காளராக இந்தப் பெண் பணியாற்றி வருகிறார்.2016-ம் ஆண்டு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த எந்த வியூகத்தையும், தொழில் நுட்பத்தையும் ரஷியா பயன்படுத்தியதோ, அதையே இப்போதும் பயன்படுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க அரசின் கொள்கையிலும், வாக்காளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ரஷியா, சீனா, ஈரான், மற்றும் சில நாடுகள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை கூறுகிறது.ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடமும், அமெரிக்க கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் பிற நாடுகள் செயல்படுவது கவலை அளிக்கிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.