கொல்கத்தாவில் வெடிகுண்டு புரளியால் ரெயில் போக்குரவத்து பாதிப்பு

0

சீல்டா மற்றும் பூங்கா சர்க்கஸ் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கிடப்பதை நேற்று காலை ரெயில்வே ஊழியர் கண்டார்.

உடனே இது குறித்து அவர் மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையில் தண்டவாளத்தில் கிடப்பது வெடிகுண்டு என வேகமாக தகவல்கள் பரவின.இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்டவாளத்தில் கிடந்த பொருளை ஆய்வு செய்தபோது அது வெடிகுண்டு அல்ல என்பதும், யாரோ வேண்டுமென்றே புரளி கிளப்பியதும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் தண்டவாளத்தில் கிடந்த பொருளை அப்புறப்படுத்தியதும், ரெயில் போக்குவரத்து சீரானது.

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.