தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

0

சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்து உள்ளார். அவர் கூறும்பொழுது, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நவம்பர் 6ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். நவம்பர் 6ந்தேதி முதல் 8ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார்.

இதனால் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரி கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இதேபோன்று ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 6ந்தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.