மசூதிக்கு சென்ற போது செல்பி எடுத்த ரசிகர்கள்: நடிகர் மம்முட்டி கோபம்

0

சமீபத்தில் மதுரையில் நடிகர் சிவகுமாருடன் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது அவரது செல்போனை சிவகுமார் தட்டி விட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த சம்பவத்துக்கு சிவகுமார் வருத்தம் தெரிவித்ததுடன் அந்த இளைஞருக்கு புதிய செல்போனையும் வாங்கி கொடுத்தார்.
இப்போது மலையாள நடிகர் மம்முட்டியும் செல்பி ரசிகர்களால் கோபமுற்றார். கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் ஒரு மசூதிக்கு தொழுகை செய்ய மம்முட்டி சென்றார். அவர் காரில் இருந்து இறங்கியதும் ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுக்க முண்டியடித்தனர். இது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

உதவியாளர்கள் மூலம் அவர்களை அப்புறப்படுத்தினார். செல்பி எடுத்த ரசிகர்களிடம், ‘‘மசூதி செல்பி எடுப்பதற்கான இடம் இல்லை. இது பிரார்த்தனை செய்வதற்கான இடம். எனவே செல்பி எடுக்காதீர்கள்’’ என்று அறிவுரை கூறினார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் செல்பி எடுப்பதை நிறுத்தினார்கள். அதன்பிறகு மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.